துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-05-10 20:03 GMT

பாளையங்கோட்டை யூனியன் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திராவிடமணி, ராதாபுரம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ராதாபுரம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், மானூர் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மானூர் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பாளையங்கோட்டை யூனியன் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்