தஞ்சை மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
துணை தாசில்தார்கள்
தஞ்சை மாவட்டத்தில் துணை தாசில்தார்கள் நிலையில் உள்ளவர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் செய்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
ஒரத்தநாடு தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய பிரான்சிஸ் பதவி உயர்வு பெற்று, ஒரத்தநாடு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுரேஷ் பதவி உயர்வு பெற்று பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பேராவூரணி- திருவிடைமருதூர்
தஞ்சை தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் மதியழகன் பதிவு உயர்வு மூலம் பேராவூரணி தாலுகா அலுவலக கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், திருவிடைமருதூர் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன் பதவி உயர்வு மூலம் திருவிடைமருதூர் தாலுகா தலைமையிடத்து கூடுதல் துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் மதியழகன் பதவி உயர்வு மூலம் பூதலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், தஞ்சை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜலெட்சுமி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக ஐ -பிரிவு தலைமையிடத்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பூதலூர்- தஞ்சை
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், தஞ்சை தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், திருவிடைமருதூர் தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சித்ரா கும்பகோணம் வருவாய் கோட்ட தலைமை உதவியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பூதலூர் தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செல்வம், பூதலூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பூதலூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் பூவந்திநாதன், கலெக்டர் அலுவலக உ -பிரிவு தலைமை உதவியாளராகவும், கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலக தலைமை உதவியாளர் சீனிவாசன், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றம்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளர் சமத்துவராஜ், மாவட்ட கலெக்டர் அலுவலக பி -பிரிவு தலைமை உதவியாளராகவும், கலெக்டர் அலுவலக பி -பிரிவு தலைமை உதவியாளர் பைரோஸ் பேகம் மாவட்ட கலெக்டர் அலுவலக பி பிரிவு தலைமை உதவியாளராகவும், தஞ்சை வருவாய் கோட்ட தலைமை உதவியாளர் திப்புசுல்தான் கலெக்டர் அலுவலக ஜி-பிரிவு தலைமை உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.