நாமக்கல் மாவட்டத்தில் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து வரும் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக நலன்கருதி கலெக்டர் ஸ்ரேயா சிங் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த தனபால் கொல்லிமலைக்கும், அங்கு பணியாற்றி வந்த புஷ்பராஜன் (கிராம ஊராட்சி) எலச்சிபாளையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லிமலை
இதேபோல் கொல்லிமலையில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பரமத்திக்கும், அங்கு பணியாற்றி வந்த தனம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த சரவணன், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல் மருத்துவ விடுப்பில் இருந்த பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரிஜா திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.