வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சி
ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சி
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் உள்ள நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயர்மட்ட குழு உறுப்பினர் கரிகாலன் ஆகியோர் பேசினர். .இதில் கலந்துகொண்ட 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து சந்தேகங்களை கேட்டறிந்தனர். முடிவில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய கள ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.