பருத்தி பயிரில் நானோ யூரியா பயன்படுத்துவது குறித்து பயிற்சி
பருத்தி பயிரில் நானோ யூரியா பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பருத்தி பயிரில் நானோ யூரியா பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையம்மாள் கலந்து கொண்டு பேசினார். கள அலுவலர் பரஞ்சோதி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயத்தில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து விளக்கி கூறி, நானோ யூரியாவை இலைகளின் மீது தெளிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்த செயல்விளக்கம் அளித்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். முடிவில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பவித்ரா நன்றி கூறினார்.