உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்சி

வாணியம்பாடியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-08-09 12:23 GMT

அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர், தன்னார்வலர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். பள்ளி மேலாண்மை குழுவில் ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பங்களிப்பு, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், மேலாண்மை குழு உறுப்பினர்களின் பங்கு என்ன என்பது குறித்து ஒரு நாள் பயிற்சி வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்புராயன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதிகளில் இருந்து ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மேலாண்மை குழுவுடன் ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம், இலவச கட்டாய கல்வி, மேலாண்மை குழுவினரின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கி கூறினர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமலதா, கார்த்திகேயன், ஆசிரிய பயிற்றுநர்கள் ராணி, ஹேமமாலினி தேவி, சகாயராஜ், பயிற்றுனர் மகாலட்சுமி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்