ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி
வீ.பாளையம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி
கள்ளக்குறிச்சி
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் அட்மா திட்ட மூலம் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி கள்ளக்குறிச்சி அருகே வீ.பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவி பழனியம்மாள் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சைமன் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும், மண் மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தார். தொடர்ந்து வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி வேளாண்மை மானியங்கள் குறித்தும், திரவ உயிர் உரங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். இதில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.