மீன் குஞ்சு வளர்ப்பு குறித்து பயிற்சி
மீன் குஞ்சு வளர்ப்பு குறித்து பயிற்சி நடந்தது.
திருக்காம்புலியூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீன் குஞ்சுகள் பற்றிய விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் தங்கவேல் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் முரளிகிருஷ்ணன் வரவேற்று பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் வசந்த் வேளாண்மை திட்டங்கள் பற்றியும், வேளாண் கிடங்கில் உள்ள இடுபொருள்களான விதைகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுட்டம் ஆகிய வற்றின் இருப்பு நிலை பற்றி விவசாயிகளுக்கு தெரிவித்தார். தொடர்ந்து மாயனூர் மீன்வள ஆய்வாளர்.பழனி உள்நாட்டு மீன் வளர்ப்பு பற்றியும், மீன் வளத்துறையில் உள்ள திட்டங்கள் பற்றியும், பண்னைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பு மேற்கொள்வதன் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். இதில் விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.