தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது குறித்து பயிற்சி
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது குறித்து பயிற்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையா அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பயிற்சி முகாம் வெள்ளம்பி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் பரமசிவம் கலந்துகொண்டு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும், மண்ணுக்கு ஏற்றவாறு பயிர் ரகங்களை தேர்வு செய்து பயிரிடுவது குறித்தும் விளக்கினார்.
அட்மா திட்ட பொறுப்பாளர் பாபு உழவின் மேலாண்மை, அட்மா திட்ட செயல்பாடு பற்றி விளக்கினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த உதவி வேளாண்மை அலுவலர் திவ்யா, துணை வேளாண்மை அலுவலர் சங்கர், அட்மா திட்ட அலுவலர் ராஜேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் தாமோதரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.