போக்குவரத்து போலீசாருக்கு விபத்துகள் குறித்து பயிற்சி

போக்குவரத்து போலீசாருக்கு விபத்துகள் குறித்த பயிற்சியை டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-01 18:08 GMT

வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு சாலை விபத்துகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பாகாயத்தில் உள்ள புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

பயிற்சியில் போக்குவரத்து போலீசார், சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களிகளிடம் சாலை விபத்தின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் ஜேக்கப் ஜார்ஜ், ஜூடி ஆன் ஜான், குரு நாகராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்