பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பொன்னமராவதி ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள மூலங்குடி, நாத்துப்பட்டி, சூரப்பட்டி, கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் கல்யாணி, முகமதுஆசாத், யசோதா, மாலிகைகருப்பு உள்ளிட்ட ஆசிரியர்கள் செயல்பட்டனர். மேலும் பள்ளி மேலாண்மைக்குழுவின் உறுப்பினர்களின் கடமைகள், இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் குழந்தைகளின் உரிமைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகள், துணைக்குழுக்களின் பணிகள் உள்ளிட்ட சாராம்சங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.