குற்ற புலனாய்வு குறித்து போலீசாருக்கு பயிற்சி

பழனியில் குற்ற புலனாய்வு குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-08-19 22:15 GMT

பழனி உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தர்களுக்கு குற்ற புலனாய்வு குறித்த பயிற்சி முகாம், பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். மதுரை சட்டக்கல்லூரி பேராசிரியர் சிவக்குமார் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். அப்போது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் விசாரணை முறை, புலனாய்வு முறைகள், தடயங்கள் சேகரிப்பு, ஆவணப்படுத்தும் விதம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் போலீசாரும் குற்ற புலனாய்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்களை கேட்டு பயன் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்