விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி

மயிலாடுதுறை அருகே விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள் பயிற்சி அளித்தனர்

Update: 2022-09-11 17:47 GMT

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் உள்ள யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருட்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாயிகள் முருகேசன், கார்த்திகேயன், கருப்பையன், அகோரம், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில், ¼ கிலோ விதைநெல்லில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த ஆலங்குடியை சேர்ந்த பெருமாள் கலந்து கொண்டு நஞ்சில்லா நெல் ரகங்களை எவ்வாறு உற்பத்தி செய்வது, பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட வயலை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து பேசினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மேகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்