அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Update: 2023-07-13 20:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பரவலாக்கும் பணிமனை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்லூரி முதல்வர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

இதில் 2022-23-ம் ஆண்டுக்கான செயல் ஆராய்ச்சியை பரவலாக்கும் பணிமனை பயிற்சியில் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர். இந்த ஆய்வின் பயனை மாணவர்களிடம் சேர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதுகுறித்து ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், செயல் ஆராய்ச்சி பரவலாக்கல் பணிமனை என்பது ஆசிரியர்கள் தாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை கட்டுரையாக தயாரித்து பிற ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறுவதுடன், அதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறும் நிகழ்வாகும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்