கல்வராயன்மலை வனப்பகுதியில் நாட்டு மரங்களை இனம் காணும் பணி குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி

கல்வராயன்மலை வனப்பகுதியில் நாட்டு மரங்களை இனம் காணும் பணி குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. .

Update: 2022-06-30 16:44 GMT

கச்சிராயப்பாளையம், 

அடர்ந்த வனப்பகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன்மலை அமைந்துள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என 4 மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியான இந்த கல்வராயன்மலை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளும், அரிய வகை பறவைகள் மற்றும் பல்வேறு வகையான நாட்டு மரங்களும் உள்ளன. குறிப்பாக குருவி பழமரம். குட்டை இலந்தை ஆவாரம், தரணி, வெள்ளகொளஞ்சி, வெல்வேகம், ஆதிமரம், குடைவேலை எரும்புலி என பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்ட ஏராளமான மரங்களும் உள்ளன.

மருத்துவ குணங்கள்

இந்த நிலையில் கல்வராயன்மலையில் வனப்பகுதியில் வனத்துறையினருக்கு நாட்டு மரங்கள் இனம் காணும் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி வன சரகர் கோவிந்தராஜ், கோமுகி வன சரகர் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு மரங்கள், அதன் மருத்துவ குணங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதோடு, பல்வேறு வகையான விலை உயர்ந்த நாட்டு மரங்களும், மருத்துவ குணங்கள் கொண்ட நாட்டு மரங்களும் இருப்பதை கண்டு பிடித்தனர். அதன்பிறகு நாட்டு மரங்களில் உள்ள மருத்துவ குணங்கள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், மரங்களை இனம் காணுவது குறித்தும் வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்