கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

Update: 2023-08-17 17:57 GMT

 வேட்டமங்கலம் கிராமம் குளத்துபாளையத்தில் வேளாண்மை துறை மற்றும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் கரூர் வேளாண்மைத் துறை இணை இயக்குனர் கலைச்செல்வி, துணை இயக்குனர் உமா, உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், வேளாண்மை அலுவலர்கள் ஜெயபாரதி, ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையின் கோட்ட மேலாளர் சிதம்பரம் கலந்துகொண்டு கரும்பு நாற்று நடவின் பயன்கள் பற்றியும், ஆலையின் கரும்பு நடவு மானியம் பற்றியும் எடுத்துரைத்தார். வேளாண்மை துறையை சேர்ந்த நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்