ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
கந்திலி வட்டாரம், நரியனேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை எண்ணெய், பயறு, பருத்தி என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் பச்சியப்பன் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும், உர மேலாண்மை, பூச்சிகொல்லி மேலாண்மை, நுண்ணுயிர் உரம் குறித்து விளக்கி பேசினார். கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி வேளாண்மைதுறையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்ட ஆலோசகர் வாசுதேவ ரெட்டி பயறு வகையில் தாக்கக்கூடிய பூச்சிகள், நோய்கள் கட்டுபடுத்தும் முறைகள் குறித்து பேசினார். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.