சேனைக்கிழங்கு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சேனைக்கிழங்கு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பள்ளிப்பாளையம் கிராமத்தில் சேனை கிழங்கு சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. இதற்கு முதுநிலை விஞ்ஞானி திரவியம் தலைமை தாங்கினார். விஞ்ஞானிகள் ரமேஷ், கேசவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ேசனை கிழங்கில் உர பயன்பாடு மற்றும் சந்தை நிலவரம், சேனைக்கிழங்கின் ரகங்கள் மற்றும் உற்பத்தி உத்திகள் போன்ற தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.இதில், வல்லுனர்கள் கவியரசு, திருமுருகன், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.