வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நெகமம்
கிணத்துக்கடவு ஒன்றியம் ஆண்டிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், உழவன் செயலி உபயோகம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. சொட்டு நீர் பாசனம், மானிய விலையில் பூச்சி கொல்லி தெளிப்பான் உள்பட விவசாய உபகரண பொருட்கள் பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் ஒருங்கினைந்த வளர்ச்சித்திட்டம் குறித்தும், பயிர்க்காப்பீடு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பயிற்சியில், கிணத்துக்கடவு ஒன்றிய அட்மா தலைவர் மெட்டுவாவி சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி சிதம்பரம், வேளாண் துணை இயக்குனர் மோகனசுந்தரம், வானவராயர் கல்லூரி பேராசிரியர் அஜய்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவக்குமார், வேளாண் உதவி அலுவலர் முத்துலோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.