நவீன முறையில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

திருப்பத்தூர் அருகே நவீன முறையில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-06-28 18:03 GMT

கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து நவீன முறையில் கறவை மாடு வளர்ப்பு குறித்து 50 பெண் விவசாயிகளுக்கு 3 நாள் பயிற்சி வெங்களா புரம்கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பீரிடம் பவுண்டேஷன் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் குத்து விளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் மைய தலைவரும், விஞ்ஞானியுமான சுந்தர்ராஜன் கறவை மாடு வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்து பேசினார். அப்போது தீவன உற்பத்தி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை சரியாக கடைபிடித்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

வேளாண் அறிவியல் மையத்தின் கால்நடை டாக்டர் ரமேஷ், டாக்டர் சிவகுமார், வேளாண் அறிவியல் மையத்தை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் பயிற்சி வழங்கினார்கள். பயிற்சியில் ஒரு நாள் பட்டறிவு பயணமாக பெங்களூரில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விவசாயிகளை அழைத்து சென்று பல்வேறு விஞ்ஞானிகளுடன் கறவை மாடு வளர்ப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தினர்கள். மேலும் இந்த நிறுவனத்தில் உள்ள பல்வேறு பசு இனங்கள், தீவன தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொண்டனர். இந்த 3 நாள் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த 50 பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அனைத்து விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பு பற்றிய பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அதிகாரி எழிலரசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்