மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் மனநலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.

Update: 2022-06-23 18:45 GMT

கடவூர் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் மாணவர்களின் உடல் நலம், மனநலம் குறித்த இணைய தளம் வாயிலாக 15 மையங்களில் பயிற்சி நடைபெற்றது. மாணவர்களுக்கு ஏற்படும் மன மாற்றம் மற்றும் அதற்கான தீர்வு, உடல் சம்பந்தமான பிரச்சினை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராணி ஆய்வு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் வரதராஜ், ஆசிரிய பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்