கோவில்பட்டியில்ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவில்பட்டியில் தேசிய குழந்தைகள் மாநாட்டை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-09-14 10:50 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 30-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நேற்று நடந்தது.

பயிற்சிக்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சின்ராசு தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி முன்னிலை வகித்தார். நாகலாபுரம் அரசு கல்லூரி பொருளாதார துறை தலைவர் பேராசிரியர் எஸ். சுரேஷ் பாண்டி வரவேற்று பேசினார். புதூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோவில்பட்டி நிர்வாகிகள் பிரபு, மணிமொழி நங்கை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்துரையாளர்களாக ஆசிரியை வசந்தி, சாந்தா, ஆசிரியர்கள் மோகன், முரளி ஆகியோர் பங்கேற்றனர். கோவில்பட்டி நிர்வாகி சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்