குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி

மன்னார்குடியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது

Update: 2022-10-12 19:00 GMT

மன்னார்குடி;

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் பரிமாற்ற குழுமமும், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் அன்பரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ். பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர் ஆர். ஏசுதாஸ், பள்ளியின் தலைமை ஆசிரியை மா.தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் இம்மானுவேல் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து பேசினார். மன்னார்குடி வட்டார கல்வி அலுவலர்கள் ஜெ.இன்பவேணி, து.முத்தமிழன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் ஆய்வு கட்டுரைகள் ஏற்படுத்தும் சமூக விளைவுகள் குறித்து பேசினார். முடிவில் கிளை பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்