இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-21 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மகளிர் குழு மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மகளிர்அளிக்கும் விண்ணப்பத்தை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி மகளிர் குழு மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் பணியாற்றும் அலுவலர்கள், மகளிர்கள் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பத்தை சரியாகவும், விரைவாகவும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயனாளிகள் முகாமிற்கு குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் பொறுப்பாளர்களிடம் கூறி வரவைக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர், எனவே அவர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இப்பணியில் ஈடுபடவுள்ள தன்னார்வலர்கள், அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றார். இதில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், தாசில்தார் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் கல்யாணி உள்பட, மகளிர் குழு மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்