வனக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
இடையக்கோட்டை பகுதியில் வனக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்சி. (வனம்) படிக்கிற ஆர்த்தி, அஜித்குமார், கிருதிக்ஸ்ருதி, கெவின்ஜோஸ், நவீன், பிரபாவதி, தமிழரசி, சூர்யபிரகாஷ் ஆகியோர் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள கருமலை வனப்பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள், பயிற்சி பெறுவதற்காக வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையில் வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். வனப்பகுதியில் உலா வந்த பறவைகள், விலங்குகளின் நடமாட்டம், அவற்றின் குணநலன்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வனத்தில் உள்ள மரங்களின் பெயர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதேபோல் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு அழைத்துச்சென்று வனத்துறையினரின் பணி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தாங்கள் பெற்ற பயிற்சி குறித்து அவர்கள் நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்து கொண்டனர். முன்னதாக சிறுமலை, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, அழகர்கோவில், அய்யலூர் ஆகிய வனப்பகுதிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.