விவசாயிகளுக்கு பயிற்சி
தேனி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி உழவர் சந்தையில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவிகள் குழுவின் சார்பில் விவசாயிகளுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது.
இதில், வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் தெய்வம், ஜெயச்சந்திரன், சிவா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாணவிகள் ஆர்யலட்சுமி, அனுபாபு, தாராலட்சுமி, விவேதா, பிரவீணா ஆகியோர் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்களான பழப்பறிப்பான், தானியங்கள் மற்றும் பயறு வகைகளை சேமிக்கும் பைகள், விதை நேர்த்தி செய்யும் முறை, வசம்பு எண்ணெய் தயாரித்தல் ஆகியவை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.