விவசாயிகளுக்கு பயிற்சி

நெல் சாகுபடியில் தண்ணீரின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2022-10-27 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பனங்காட்டங்குடி கிராமத்தில் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சுப்ரமணியன் வழி காட்டுதலின்படி கீழ்கொள்ளிடம் பாசன பகுதி விவசாயிகளுக்கு நெற்பயிரில் நீர்மறைய நீர் கட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உளவியல் இணை பேராசிரியர் இளமதி மேற்பார்வையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இணை பேராசிரியர் நாகேஸ்வரி கலந்துகொண்டு பேசுகையில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெற்பயிர் சாகுபடி செய்ய வேண்டும். இந்தியாவிலேயே அனைத்து மாதங்களிலும் நெல் சாகுபடி செய்யும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. ஒரு ஏக்கர் நிலத்துக்கு சாகுபடி செய்யப்படும் தண்ணீரின் அளவை முறையாக சிக்கனமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் 4 ஏக்கர் நிலத்தில் நெற் பயிர் சாகுபடி செய்ய முடியும். நெற்பயிரில் களைகளை அழிக்க நீரின் அளவு, நேரம், காலம் மற்றும் களைக்கொல்லியின் அளவு ஆகியவை முக்கியமானதாகும் என்றார். தொடர்ந்து நெற்பயிரில் தண்ணீரின் அளவு எந்த அளவுக்கு வைத்து பராமரிக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பயிர் நோயியல் துறை பேராசிரியர் ராஜப்பன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்