விவசாயிகளுக்கு பயிற்சி

சேரன்மாதேவியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-09 19:44 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி வட்டார பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக விவசாயிகள் தொகுப்பு குழுவிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சேரன்மாதேவி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தக்கைப் பூண்டு விதைகள் வழங்கினார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜாய்லின் சோபியா சிறப்புரையாற்றினார். நெல்லை விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் ரெனால்டோ ரமணி, முன்னோடி அங்கக விவசாயிகள் லட்சுமிதேவி, சங்கரநாராயணன், வேளாண்மை அலுவலர் மணி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பேசினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்