ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டி கிராமத்தில் இயற்கை முறையில் சிறுதானியம் சாகுபடி செய்வது சம்பந்தமாக பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பகோட்டை வேளாண்மைதுறை துணை இயக்குனர் முத்தையா தலைமை தாங்கினார். சிறுதானியம் தொகுப்பு திடல் அமைக்கும் 20 விவசாயிகள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். சிறுதானியம் பயிர் சாகுபடி, தொழில்நுட்பம், இயற்கை முறையில் பூச்சி நோயை கட்டுபடுத்துவது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வன துறை அதிகாரி சுதாகர், வேளாண்மைதுறை அதிகாரி அன்னபூரணி, உதவி வேளாண்மைதுறை அதிகாரி ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறுதானிய தொகுப்பு திடல் அலுவலர் எபினேசர் நன்றி கூறினார்.