நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி

நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-13 19:07 GMT

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி நடைபெற்றது. அம்பை நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். அம்பை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்த்தி சந்திரன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர் செல்வக்குமார், நெல்லை மகளிர் திட்ட சமூக ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் அரசு பள்ளிகளில் காணப்பட வேண்டிய கட்டமைப்புகள், அடிப்படை வசதிகள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தனர். இல்லம் தேடிக்கல்வி திட்டம் குறித்து அம்பாசமுத்திரம் ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத் எடுத்துரைத்தார். பயிற்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்