வேளாண்மை அறிவியல் மாணவர்களுக்கு களப்பயிற்சி
சேரங்குளம் அரசு பள்ளி வேளாண்மை அறிவியல் மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்தது
மன்னார்குடி;
மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை அறிவியல் தொழிற்கல்வி பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாள் நேரடி களப்பயிற்சி மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்றது. முகாமில் மண்புழு உரம், உயிர் உரம், மக்கிய தொழு உரம், தென்னை நார் கழிவு, பாலித்தீன் பைகளில் விதைகளை நிரப்புதல், ஒட்டுக்கட்டுதல், போன்றவை குறித்து பயிற்சி பெற்றனர். தோட்டக்கலைத்துறை மன்னார்குடி உதவி இயக்குநர் இளவரசு வழிகாட்டுதலின் படி பண்ணை மேலாளர் விஜயக்குமார் மற்றும் வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர் பரஞ்சோதி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி நிறைவு நாளில் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சரவணப்பெருமாள், உடற்கல்வி ஆசிரியர் வேணுகோபாலன், பள்ளி செயலாளர் புகழேந்தி மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.