பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-10-17 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் அளியூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை துறை மூலம் இயற்கை வேளாண்மைக்காக வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். இந்த பயிற்சியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்துகொண்டு மூலிகை பூச்சி விரட்டி, பஞ்சகாவியா, மோர் கரைசல், மீன் அமிலம் ஆகிய இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் பண்ணை விவசாயி குமரகுரு இயற்கை சாகுபடியில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பேசினார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டனர். முன்னதாக தோட்டக்கலை துணை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் தோட்டக்கலை அலுவலர் தயாளன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்