போலீஸ் அதிகாரிகளுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்பு

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது குறித்து ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-07-23 15:59 GMT

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது குறித்து ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

புத்தாக்க பயிற்சிவகுப்பு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் நேற்று இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது குறித்த ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்..

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி மற்றும் நீதித்துறை அகாடமியின் கவுரவ விரிவுரையாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டப்பிரிவுகள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீஸ் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகள் குறித்து காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், நீதிமன்ற அலுவல்புரியும் காவல் ஆளினர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்