சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2022-11-11 17:47 GMT

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 42 பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழா பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜி ஜெய்தேவ் கலந்து கொண்டு வீரார்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பேசினார்.

அப்போது இன்று ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். உண்மைத் தன்மை, விசுவாசம், நம்பகத்தன்மையின் நெறிமுறைகள், தைரியம், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் மதிப்புகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். பயிற்சி நிறைவு செய்த வீரர்கள் நாட்டின் பல இடங்களில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விண்வெளி மையங்கள் போன்ற இடங்களுக்கு பணிக்கு செல்கிறார்கள்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய கமாண்டன்ட், மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்