கணவரை இழந்த பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் கணவரை இழந்த பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2022-09-09 14:11 GMT

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கணவரை இழந்த பெண் காவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் 4-வது பேட்ஜில் பயிற்சி முடித்த 51 பெண் காவலர்களுக்கான நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மைய முதல்வர் டி.ஐ.ஜி. சாந்தி ஜி ஜெய்தேவ் கலந்து கொண்டு பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார். தொடர்ந்து பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. தீக்‌ஷா ஷர்மா, சுஷிலா ஓரான் மற்றும் அனைத்து பயிற்சியிலும் சிறந்து விளங்கிய கிரன் ஜஸ்ரோடியா ஆகியோருக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய கமாண்டன்ட் கவுரவ் தோமர் மற்றும் அதிகாரிகள்,, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்