இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம்

தெள்ளாரில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-08-05 11:17 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே தெள்ளார் ஒன்றிய பகுதிகளில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ப்பது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் தெள்ளாரில் நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் தரணி, மேற்பார்வையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் கற்பகவல்லி வரவேற்றார்.

பள்ளி செல்லா குழந்தைகளை எவ்வாறு களஆய்வு மேற்கொள்வது என்று எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தெள்ளார் ஒன்றியத்தில் 34 குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்