அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம்
நாகையில் அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
நாகை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. முகாமை நாகை விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தொடங்கி வைத்து அங்கக வேளாண்மை, பாரம்பரிய ரகங்கள் சாகுபடி, அவற்றின் விற்பனை வாய்ப்பு குறித்து பேசினார். முகாமில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அங்கக சான்றளிப்புத் துறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு அங்ககச்சான்று பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையத்தை சேர்ந்த கண்ணன், அங்கக வேளாண்மையில் உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் இடுபொருட்கள் குறித்து பேசினார். சிக்கல் வேளாண்மை அறிவியல் மையத்தை சேர்ந்த ரகு, அங்கக காய்கறி சாகுபடி குறித்து பேசினார். மேலும் அங்கக வேளாண்மையில் கடைப்பிடிக்க வேண்டிய உயிரியல் முறையில் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள், அங்கக பண்ணையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், அனுமதிக்கப்பட்ட இடுபொருட்கள் குறித்து விதைச்சான்று அலுவலர்கள் விளக்கி கூறினர். முடிவில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.