திருத்தணியில் புதிய செல்போன் செயலி குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம்

திருத்தணியில் புதிய செல்போன் செயலி குறித்து போலீசாருக்கு பயிற்சி முகாம் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-11-13 14:47 GMT

குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்க ரோந்து போலீசாருக்கு 'ஸ்மார்ட் காவலர் ஆப் இ பீட்' என்ற புதிய செல்போன் செயலி தமிழக காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 காவல் உட்கோட்டங்களில் முறையே ஒருபோலீஸ் நிலையத்தை முன்னோட்டமாகக்கொண்டு திருவள்ளூர் நகர போலீஸ் நிலையம், ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம், திருத்தணி போலீஸ் நிலையம், பொன்னேரி போலீஸ் நிலையம், ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து 'ஸ்மார்ட் காவலர் ஆப்' குறித்து சிறப்பு பயிற்சி முகாம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், மாநில குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் ஸ்மார்ட் காவலர் ஆப் குறித்து போலீசாருக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்த பயிற்சி முகாமில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, திருத்தணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீர்த்திகா, ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்