ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி முகாம்

திருப்புல்லாணி யூனியனில் ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-01-23 18:45 GMT

திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பிரிவு மற்றும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கான தண்ணீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் மேலாளர் லதா வரவேற்றார். திருப்புல்லாணி யூனியனில் உள்ள ஊராட்சிகளின் செயலாளர்களில் குடிநீர் சுகாதார உறுப்பினர்களாக தலா 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தண்ணீர் பரிசோதனை பெட்டி வழங்கப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் இதனை பயன்படுத்தி கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அவர்கள் பயன்படுத்தும் குடிநீர், நிலத்தடி நீரை பரிசோதனை செய்து தண்ணீரின் தரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிசோதனை பெட்டியை பயன் படுத்தும் முறை குறித்தும் நீர் பகுப்பாய்வாளர் செல்வி விளக்கினார். நிகழ்ச்சியில் யூனியன் அலுவலர் நடராஜன், மகாத்மா கல்வி மற்றும் ஊரக மேம்பாட்டு சமூக பணி நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் தனபாக்கியம், சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். யூனியன் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்