இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
ரெட்டிபாளையம் பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தனன், ஆசிரியர் பயிற்றுனர் வெங்கடேசன், தன்னார்வலர்கள் மாணவர்களின் கல்வி நிலையை சோதித்தனர்.
இதில் ஏ.அபிநயா, தேன்மொழி, ஆஷா, உயர்தொடக்க நிலை ரா.தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் நன்றாக கிராமப்புற மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்குமாறு கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சகிலா, உதவி ஆசிரியை சுமதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.