மணவள அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
செங்கோட்டை அருகே மணவள அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண்வள அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்டங்களின் வேளாண்மை துணை இயக்குனர் (பொ) உதயகுமார் தலைமை தாங்கினார். தென்காசி வேளாண்மை உதவி இயக்குனர் முகுந்தாதேவி முன்னிலை வகித்தார் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வேளாண்மைதுறை அலுவலர் ராஜேந்திரகணேசன் பயிற்சி நடத்தினர். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு சாகுபடி செய்யும் முன்னரே வயல்வெளியில் மண் மாதிரி எடுத்து பரிந்துரைப்படி உரம் இடுதல் பற்றிய பயிற்சி நடைபெற்றது. மண்வளம் பேணுதல் பற்றிய தொழில்நுட்ப உரையினை வல்லுநர்கள் ஆற்றினர் உதவி வேளாண்மை அலுவலர் குமார் நன்றி கூறினார். முன்னோடி விவசாயிகள் பட்டமுத்து, ராமகிருஷ்ணன், அய்யப்பன் உள்ளிட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.