தென்னையில் பூச்சி மேலாண்மை செயல் விளக்க முகாம்

தென்னையில் பூச்சி மேலாண்மை செயல் விளக்க முகாம் நாளை நடக்கிறது.

Update: 2023-04-25 19:15 GMT

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சூரப்பள்ளம் கிராமத்தில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த செயல் விளக்கம் மற்றும் மேலாண்மை ஆய்வு முகாம் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. இதில் வேளாண் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளிக்க உள்ளனர். சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள அய்யா பாலு தென்னந்தோப்பில் இந்த முகாம் நட்கிறது. பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்