விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிவகங்கையை அடுத்த பெருங்குடி ஊராட்சியில் வேளாண்மைத்துறை உழவர் பயிற்சி மையத்தின் சார்பில் கிராம அளவிலான அடிப்படை விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. பெருங்குடி ஊராட்சி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் வீரையா முன்னிலை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் பிரபாவதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜா மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மைத்துறை திட்டங்கள், உழவன் செயல்பாடு, பசுந்தாள் உரப்பயிர், கரும்பு சாகுபடி, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், உயிர் உரங்கள் பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.