விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது

Update: 2023-08-28 18:45 GMT

காரைக்குடி

கல்லல் வட்டார வேளாண்மை துறை சார்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனடைய உள்ள விவசாய குழுக்களுக்கு கல்லல் யூனியன் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுருளிமலை தலைமை தாங்கினார். நுண்ணீர் பாசன வேளாண்மை துணை இயக்குனர் செல்வி முன்னிலை வகித்தார். பயிற்சியில் இயற்கை வேளாண்மை சாகுபடி முறைகள் பற்றியும் விளைபொருட்களை சந்தைப்படுத்தி அதிக லாபம் பெறும் வெற்றிகள் மற்றும் வாழ்வியல் பற்றியும் விளக்கினர். வேளாண்மை உதவி இயக்குனர் அழகுராஜா அங்கக பண்ணைகளின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். செட்டிநாடு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ஜெயராமச்சந்திரன் இயற்கை பண்ணையத்தில் ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், மூலிகை பூச்சி விரட்டி, முட்டை பாகு கூறுகள் பற்றி விளக்கினார். கூட்டத்தில் விதை சான்றளிப்பு அலுவலர் யோகேஸ்வரர் இயற்கை விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும் போது அவற்றிற்கு சான்று பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் கணபதி வேளாண் மானிய திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார். மேலும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா உதவித்தொழில்நுட்ப மேலாளர் தமிழரசி மற்றும் குருதாஸ் ஆகியோர் விதை நேர்த்தி மற்றும் முட்டை கரைசல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்