காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-07-08 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் இணை இயக்குனர் லட்சுமி காந்தன், துணை வேளாண்மை இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோரின் உத்தரவின்படி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படி விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் காய்கறி மகத்துவ மைய திட்ட மேலாளர் பெப்டின், காய்கறி மகத்துவ மைய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் பிரகாஷ், குழித்தட்டுகளில் தானியங்கி எந்திரம் மூலம் காய்கறி விதைகள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன? என்பது பற்றிய செயல் விளக்கம் அளித்தார். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான நெடும்பலம், ஆதிரங்கம், மேலமருதூர், பளையங்குடி, வேளூர், மணலி, கீராலத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து ெகாண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி, வேளாண் அலுவலர்கள் கார்த்திக், அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்