மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-05-20 19:30 GMT

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விளக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் (பொறுப்பு) அஸ்வினி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜீவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் பேசுகையில், 'பயிற்சி முடிந்து டாக்டர்களாக பணியாற்றும் போது நோயாளியுடன் கனிவாக பழகி அவர்களின் நோய்களை தீர்ப்பதில் துணை நிற்க வேண்டும். மேலும் அர்ப்பணிப்பு எண்ணத்துடன் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்' என்றார். முகாமில் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நடராஜ் முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் அப்துல் ஹமீது அன்சாரி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்