கோடைக்கால ஆக்கி பயிற்சி முகாம்
கோடைக்கால ஆக்கி பயிற்சி முகாம் தொடங்கியது
காரைக்குடி
அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அழகப்பா மாடல் கிளப் ஆக்கி யூனிட் ஆப் சிவகங்கை சார்பில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கியது. தொடக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள பள்ளி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோரும், கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தினந்தோறும் காலை முட்டை மற்றும் பால் வழங்கப்படுகிறது. முகாம் பயிற்சியாளர்களாக முன்னாள் மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முத்துகண்ணன், சுரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் குமரன், சீனிவாசன் ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.