பால்வள ஆர்வலர்கள் குழுவினருக்கு பயிற்சி

பால்வள ஆர்வலர்கள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-03-27 19:00 GMT

நாகையில், தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், பால்வள ஆர்வலர்கள் குழுவினருக்கான பயிற்சி நடந்தது. கூட்டத்தில் வெவ்வேறு ஒன்றியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பால்வள ஆர்வலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். அப்போது அவர் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் பேராசிரியர் சுரேஷ், கால்நடை வளர்ப்பில் லாபம் ஈட்டுவது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்