பயிற்சி முகாம்

செங்கோட்டையில் பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-02-21 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர்கற்பித்தல் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஜான்பிரிட்டோ தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன், ஆசிரியர்கள் சிவராமன், டேவிட்ஞானராஜ், செந்தூர்பாண்டி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சியில் கையேடு, அடைவு திறன் அட்டவணை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துசரோஜினி செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்