ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-05 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்றது. மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர், காளையார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு தலைவர் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சகாய செல்வி, அனிதா ஆகியோர் வளர்ச்சி திட்டத்திற்கான பயிற்சியினை வழங்கினார்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து குடிநீர், சுகாதாரம் மற்றும் இதர வளர்ச்சி திட்டங்களை எப்படி தயாரிப்பது அவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தாமதம் இன்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் கவுன்சில் பகுதிகளில் உள்ள கிராமங்களின் வளர்ச்சி பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் இளங்கோவன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்